முடிவுகள் அறிவிச்சாச்சே! :)
ஏகாதசியில் போட்ட புதிரை, ஆருத்ராவில் திறப்பதும், சாலப் பொருத்தமே! :)
வின்னர்கள்! புதிரா புனிதமா மன்னர்கள் இதோ!
1. ராகவ்
2. கெக்கேபிக்குணி
3. தியாகராஜன் (அனானியார் முதல் பரிசைத் தட்டிச் செல்வது, இதுவே முதல் முறை-ன்னு நினைக்கிறேன்! வாழ்க வாழ்க! :))))
தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தர்கள்!
1. குமரன்
2. ஷோபா
விடைகள் கீழே BOLD செய்யப்பட்டுள்ளன!
விடைக்கான விளக்கங்கள், விடை காண விளக்கங்கள் = எல்லாவற்றையும் இரு பெரும் சிகரங்கள் செய்யப் போகின்றன!
* 1-5 மெது விடைகளைச் குமரன் சுடுவாரு! :)
* 6-10 மசால் விடைகளை ஜிரா சுடுவாரு! :)
வென்றவர்க்கும் நின்றவர்க்கும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
மக்கள்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீக? புதிரா புனிதமா குவிஜ் ஆடி கொஞ்சம் நாள் ஆயிருச்சா? பரவாயில்ல! வைகுண்ட ஏகாதசி அன்னிக்கி கண் முழிச்சி, ஏதாச்சும் ஆடணும்-ல? எத்தனை நாள் தான் பாம்பு-ஏணி விளையாட்டு வெளையாடிக்கிட்டு இருப்பீக? இந்த ஏகாதசிக்குப் "புதிரா? புனிதமா?" ஆடலாம் வாங்க! :)
அப்படியே தொடர் திருப்பாவைப் பதிவில் இருந்தும், ஜாலியா ஒரு விளையாட்டுக்கு ப்ரேக் அடிச்சா மாதிரியும் இருக்கும்! :)
இன்னிக்கி சிறப்புத் தலைப்பு! - தெய்வத் தமிழ் மொழி!
அவன் மட்டும் தான் தமிழோடு விளையாடுவானா? நாம கூடத் தமிழோடு விளையாடவே வந்தோம்! விளையாடலாமா? :)
இன்னிக்கி ராத்திரி நல்லா முழிச்சிக்கிட்டே ஆடுங்க! :))
விடைகள், வெள்ளி இரவு (நியூயார்க் நேரப்படி)!
| 1 | பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு! திருவடிகளின் பெருமையைச் சொல்லும் இந்தக் குறள் எந்த அதிகாரம்? | 1 அ) கடவுள் வாழ்த்து ஆ) துறவு இ) நீத்தார் பெருமை ஈ) தவம் |
| 2 | பக்தி இலக்கியப் பெண் கவிஞர்கள் என்றால் உடனே நினைவுக்கு வருபவர்கள் இருவர் = ஆண்டாள், காரைக்கால் அம்மையார்! 12 ஆழ்வார்களில் ஆண்டாள் ஒருத்தி! 63 நாயன்மார்களில், மூன்று பேர் பெண்கள்! அதில் ஒருவர் காரைக்கால் அம்மையார். மற்ற இருவர் யார்? இந்த இருவரும் பாடல்கள் எதுவும் எழுதலை! | 2 அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார் ஆ) மங்கையர்க்கரசியார்/ தண்டியடிகள் இ) தண்டியடிகள்/ கவுந்தியடிகள் ஈ) திலகவதியார்/ வாயிலார் |
| 3 | ஐம்பெரும் காப்பியத்துள் ஒன்றான சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரத்துக்கும் முந்தையது என்பது ஆய்வு! விருத்தம் என்னும் பா வகைகள் இதன் சிறப்பு! கம்பனுக்கு முன்னோடி! ஆன்மீகம் எப்பமே போர்! இல்வாழ்க்கை (அகப்பொருள்) பற்றி அது ஜாலியாவே பேசாது! - இப்படி ஒரு மதுரைக்கார புலவர் இடித்துக் காட்ட, ஒரு துறவி எழுதிய ரொமான்ஸ் கலந்த காவியம்! சீவகனுக்கு மொத்தம் எட்டு மனைவிகள் :) இது எந்தச் சமய நூல்?/ஆசிரியர் யார்? | 3 அ) பெளத்தம்/ சீத்தலைச் சாத்தனார் ஆ) சமணம்/ பெயர் இல்லை (அனானி) இ) பெளத்தம்/ நாகுதத்தனார் ஈ) சமணம்/ திருத்தக்க தேவர் |
| 4 | குறிஞ்சி, முல்லை-ன்னு இன்னிக்கி பேச்சு வழக்கில் நாம ஆக்கிப்புட்டோம்! ஆனால் தொல்காப்பியர் ஏனோ, முல்லை நிலத்தையும் மாயோனையும் முதலில் சொல்லிவிட்டு, பின்னர் தான் குறிஞ்சியும் சேயோனும் சொல்கிறார்! - இது ஏன்? என்பது ஆய்வுக்குரியது! முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் அகத் திணைகளில் குறிஞ்சி = முருகனுக்கு, முல்லை = பெருமாளுக்கு! ஆனால் புறத்திணைத் துறைகளிலும் ஒரு துறையை மாயோனுக்கும், சேயோனுக்கும் ஒதுக்கறாரு தொல்காப்பியர்! மாயோனுக்கும் சேயோனுக்கும் என்னென்ன துறைகள்? | 4 அ) கொற்றவை நிலை/கரந்தை ஆ) பூவைநிலை/ வெறியாட்டு இ) பூவைநிலை/ பிள்ளைநிலை ஈ) குரவை/ வெறியாட்டு |
| 5 | மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு இந்தக் குறளில் ஒரு அவதாரம் குறிக்கப்படுவதாக, மணக்குடவர், ஜி.யு. போப் முதற்கொண்டு, டாக்டர் மு.வ வரை எல்லாரும் உரை எழுதினார்கள்! ஆனால் இது அவதாரத்தைக் குறிக்கவில்லை என்பது தேவநேயப் பாவாணர் மற்றும் டாக்டர். கலைஞர் ஆகியோரின் அண்மைக் கால உரைகள்! எந்த அவதாரம் இது? (நோ சாய்ஸ்)/ இந்தக் குறளின் அதிகாரம் இது? | 5. வாமன-திரிவிக்ரம அவதாரம் அ) ---/ ஊக்கமுடைமை ஆ) ---/ஆள்வினை உடைமை இ) ---/மடியின்மை ஈ) ---/மன்னரைச் சேர்ந்து ஒழுகல் |
| 6 | சங்க காலத்துப் பழந் தமிழ் நூல் ஒன்றைக் கொண்டாந்து, பிற்காலத் தேவாரச் சைவத் திருமுறைகளில் தொகுத்து வைத்துள்ளார்கள்! எந்த நூல்?/ யார் ஆசிரியர்? | 6 அ) கலித் தொகை/பல ஆசிரியர்கள் ஆ) திருக்குறள்/ திருவள்ளுவ நாயனார் இ) குறிஞ்சிப்பாட்டு/ கபிலர் ஈ) திருமுருகு ஆற்றுப்படை/ நக்கீரர் |
| 7 | சிலப்பதிகாரத்தில் சில பிரபலமான முருகன் ஆலயங்களும், பெருமாள் ஆலயங்களும் காட்டப்படுகின்றன! இதில் ஒரே ஆற்றங்கறையில் இருக்கும் பெருமாள்/முருகன் ஆலயங்கள் எவையெவை? | 7 அ) திருவேங்கடம்/ காளத்தி ஆ) அழகர் கோயில்/ பழமுதிர் சோலை இ) திருவரங்கம்/ சுவாமிமலை ஈ) அழகர் கோயில்/ திருப்பரங்குன்றம் |
| 8 | கம்ப இராமாயண அரங்கேற்றம், கந்த புராண அரங்கேற்றம் - இரண்டிலுமே துவங்கும் போதே சிக்கல்! வேற யாரு? அந்நாளைய பதிவர்கள் - சில புலவர்கள் தான்! :) கம்பர், இரணிய வதைப் படலம் என்று பிரகலாதன் கதையைச் சொன்னது மூல நூலில் இல்லை என்பது வாதம். கந்த புராணத்தின் ஆரம்பமே, திகட சக்கரம் என்று இலக்கணப் பிழை என்பது இன்னொரு வாதம்! இந்த இரண்டு நூல்களும் கடைசியில் எங்கே அரங்கேறின? | 8 அ) காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம் ஆ) திருவரங்கம்/ குமரகோட்டம் இ) திருமாலிருஞ் சோலை/ பழமுதிர் சோலை ஈ) இராமேஸ்வரம்/ திருச்செந்தூர் |
| 9 | இராமனின் காவியம் = கம்பராமாயணம், நபிகளின் காவியம் = சீறாப்புராணம்! இரண்டுமே வள்ளல்கள் உதவி செய்து தான் பின்னர் எழுதப்பட்டன! ஒரு வள்ளல் கம்பருக்கு உதவி, இன்னொரு வள்ளல் உமறுப் புலவருக்கு உதவி! யார் அந்த இரு பெரும் நல்ல வள்ளல்கள்? | 9 அ) குலோத்துங்க சோழன்/ படிக்காசுப் புலவர் ஆ) சடையப்பர்/ குணங்குடி மஸ்தான் சாகிபு இ) கபிலர்/ படிக்காசுப் புலவர் ஈ) சீதக்காதி/ சடையப்பர் |
| 10 | இவர் பெரும் வைணவராக இருந்து, பின்னாளில் இயேசு பிரான் பால் ஈர்க்கப்பட்டு கிறித்துவராக மாறினார்! பெரும் கிறிஸ்துவ காவியமும் பாடினார்! யார் இவர்? என்ன காவியம்? | 10 அ) மாயூரம் வேத நாயகம் பிள்ளை/ பிரதாப முதலியார் சரித்திரம் ஆ) வீரமா முனிவர்/ தேம்பாவணி இ) எச். ஏ. கிருட்டிணப் பிள்ளை/ இரட்சணிய யாத்திரிகம் ஈ) கண்ணதாசன்/ இயேசு காவியம் |
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!
1 அ) கடவுள் வாழ்த்து ஆ) துறவு இ) நீத்தார் பெருமை ஈ) தவம் |
2. அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார் ஆ) மங்கையர்க்கரசியார்/ தண்டியடிகள் இ) தண்டியடிகள்/ கவுந்தியடிகள் ஈ) திலகவதியார்/ வாயிலார் |
| 3 அ) பெளத்தம்/ சீத்தலைச் சாத்தனார் ஆ) சமணம்/ பெயர் இல்லை (அனானி) இ) பெளத்தம்/ நாகுதத்தனார் ஈ) சமணம்/ திருத்தக்க தேவர் |
| 4 அ) கொற்றவை நிலை/கரந்தை ஆ) பூவைநிலை/ வெறியாட்டு இ) பூவைநிலை/ பிள்ளைநிலை ஈ) குரவை/ வெறியாட்டு |
| 5 அ) ---/ ஊக்கமுடைமை ஆ) ---/ஆள்வினை உடைமை இ) ---/மடியின்மை ஈ) ---/மன்னரைச் சேர்ந்து ஒழுகல் |
| 6 அ) கலித் தொகை/பல ஆசிரியர்கள் ஆ) திருக்குறள்/ திருவள்ளுவ நாயனார் இ) குறிஞ்சிப்பாட்டு/ கபிலர் ஈ) திருமுருகு ஆற்றுப்படை/ நக்கீரர் |
| 7 அ) திருவேங்கடம்/ காளத்தி ஆ) அழகர் கோயில்/ பழமுதிர் சோலை இ) திருவரங்கம்/ சுவாமிமலை ஈ) அழகர் கோயில்/ திருப்பரங்குன்றம் |
| 8 அ) காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம் ஆ) திருவரங்கம்/ குமரகோட்டம் இ) திருமாலிருஞ் சோலை/ பழமுதிர் சோலை ஈ) இராமேஸ்வரம்/ திருச்செந்தூர் |
| 9 அ) குலோத்துங்க சோழன்/ படிக்காசுப் புலவர் ஆ) சடையப்பர்/ குணங்குடி மஸ்தான் சாகிபு இ) கபிலர்/ படிக்காசுப் புலவர் ஈ) சீதக்காதி/ சடையப்பர் |
| 10 அ) மாயூரம் வேத நாயகம் பிள்ளை/ பிரதாப முதலியார் சரித்திரம் ஆ) வீரமா முனிவர்/ தேம்பாவணி இ) எச். ஏ. கிருட்டிணப் பிள்ளை/ இரட்சணிய யாத்திரிகம் ஈ) கண்ணதாசன்/ இயேசு காவியம் |
![[crossword_answers.jpg]](http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SV2DQN5HjpI/AAAAAAAAGEQ/2rv3Y85nHUc/s1600/crossword_answers.jpg)





